இந்த முறை நிறையா போட்டோ...
எங்க கிராமத்து வீடு - முன்னால் எம்பொண்ணு.
கண் கூசும் காவேரி மணல் வெளி
கோவிலில் கிடைத்த பழைய போட்டோ. 1985-யில் கடைசியாக நடந்த கோவில் கும்பாபிஷேகத்தின் போது எடுத்தது. இந்த போட்டோவில் நான் இல்லை.
திரௌபதி கோவில் முகப்பில் ரஜினி:
குழந்தைத்தனம் தொலையாத வெள்ளந்தியானக் குழந்தைகள்.
தாயம்மா சரோஜா (பல் செட்டு மற்றும் தன் பேரனுடன்)
பக்கோடா
தர்ஷிணியின் கிருஷ்ணர் மறு அவதாரம் எடுத்தே விட்டார். வர்ணம் பூசும் வேலை முடிந்திருந்தாலும், கேமராவிலிருந்து கம்ப்யூட்டர்-ருக்கு போட்டோக்கள் மாற்ற நேரம் இல்லாமல் கிடந்தது.
உடையும் முன்
உடைந்த பின்: கழுத்தில் எம்சீலால் ஒட்டி, வெள்ளை பெயின்ட் அடித்து கண் மட்டும் திறந்திருந்தேன்.
இப்போது: வர்ணம் எல்லாம் எழுதிய பின். "கிருஷ்ணன் நீலமாத்தான்" இருப்பார் என்று தர்ஷிணி தீர்மானித்ததால்.
"ஏன் கேக்கற"
"இவ்வளோ அழகா டிரஸ் பண்ணிருக்கியே கிருஷ்ணனுக்கு.... "
"உனக்கும் தான் அழகா டிரஸ் பண்ணுவேன்..."
"அப்போ இந்த மாதிரி நகை கிரீடம் எல்லாம் எங்க.. எனக்குத்தான அம்மா நீ.. "
: (
மழை
ஆல்காட் பள்ளி பொருளாதார ரீதியில் ஏழ்மையான மாணவர்களுக்கு முற்றிலும் இலவசக் கல்வி அளித்து வருகிறது. எல்லாப் பாடங்களும் இப்பள்ளியில் தமிழிலேயே கற்றுத் தரப் படுகிறது. உங்களுக்குத் தெரிந்த 'பண முடை' காரணங்களுக்காக படிப்பை நிறுத்தி இருக்கும் மாணவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்கலாம். மாசம் நூறு ரூபாய் என்ற கணக்கில், நமக்கும் வலிக்காமல், வருஷத்துக்கு ஒரு முறை இது போன்ற பள்ளிகளுக்கும் நன்கொடை அளிக்கலாமே. யோசிங்க சகாஸ்.
.