இவ்வளவு சத்தமாய் எப்படி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்
பேசும் விஷயங்கள் பலவிதமாக இருக்கின்றன
முகப்பரு முதல் கழிப்பறை கறைகள் நீக்க
சந்தன மரத்தில் அமைக்கப்பட்ட கடைசி மரியாதை
அஞ்சலிக் குறிப்புக்கள், இடுகாட்டுக்கு நீக்கும் வரை அழுதல்
நாய்களுக்குப் பின் சிங்க பொம்மை வைப்பது
சில வெயிலின் வெப்பத்தில் கருகியது
சில கோபத்தின் உஷ்ணத்தில் வறுத்தெடுக்கப்பட்டது
விஷம் தெளிப்பது போல, அமிர்த நீரோடை போல
மரணத்தின் கருப்பு நூலிழையில் பிழைத்தல்
மரணித்து விழுதல், மல்லிப்பூ வைச்சு வாடுதே,
வாழ்க்கையின் அலைகளில் தனிமையில் இருக்கிறேன் ரகங்கள்,
வாழ்வதற்கான பத்து முக்கிய பாடங்கள்
உளவியல் என்ன சொல்லியிருக்கிறது?
அருவருப்பான கழிவுநீர்
மூச்சுத்திணறும் ஆட்டக் காட்சிகள்
கணவரை, மனைவியை கேலிக்கூத்தாக்குதல்
வெறுப்பின் ஆயுதமாக மாற சில விவாத மேடைகள்
தோட்டத்தில் சாறு நிறைந்த பழங்களை நறுக்குதல்
அசுபத்துக்கு ஒப்பாரிகள்,
கருப்பை, குடலுக்குள் பயணிக்கும் மருத்துவக் கேமிரா
இந்த விஷயங்களை நான் எப்படி ஏற்றுக்கொள்வது?
இது ஒரு மூலதனம், இவை எங்கள் கருவிகள்
இவை நமது வளங்கள், இவையே நமது ஆயுதங்கள்
எல்லோரும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
நான் அவர்களை என்ன செய்ய வேண்டும்?
இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொண்டு
நான் என்ன செய்ய வேண்டும்?